Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம்?

2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. ஆனால், கேரளாவிற்கு மட்டும் வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறியவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரியைச் செலுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் ரூ.1000 மட்டும் அபராதமாக வசூலிக்கப்படும். 

டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ளும் வருமான வரிசையைச் தாக்கல் செய்யாவிட்டால் அபராதத்துடன், செலுத்த வேண்டிய வட்டிக்கு மாதம் தோறும் 1% வட்டி சேர்ந்துகொண்டே இருக்கும். 


ஏற்கெனவே, உரிய அவகாசத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதில் ஏதேனும் தவறு இருந்தால் சரிசெய்யும் வசதியும் உண்டு. ஆனால் தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive