முதுமையை தாமதப்படுத்தவும் உங்கள் கவனத்்த்தை மேம்படுத்தவும், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப் படுகிறது. உடலுக்குத் தேவையான உணவை சரியாக எடுத்துக் கொண்டாலே ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கலாம். புரதம், விட்டமின், கொழுப்பு, மினரல் போன்றவை நாம் உண்ணும் உணவின் மூலமாக தான் நம் உடலுக்குக் கிடைக்கிறது. இது நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, நீண்ட ஆயுள் போன்றவற்றில் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், முதுமையை தாமதப்படுத்தவும் உங்கள் கவனத்தை மேம்படுத்தவும், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
ஊட்டச்சத்து குறைவான உணவை உட்கொள்வதாலும், வயது முதிர்ச்சியின் காரணமாகவும் உடலில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது அனீமியா. ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்த சிவப்பணு ஹீமோகுளோபின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும். இதுதான் ரத்ததில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இது குறையும் போது உடலில் சோர்வு ஏற்படும். எலும்பு மஜ்ஜைகளில் இருந்து தான் ஹீமோகுளோபின் உற்பத்தியாகிறது. இது சீராக இருக்க உடலுக்குத் தேவையான அளவு இரும்பு சத்து இருக்க வேண்டும்.
அனீமியாவின் அறிகுறிகள்
அஜீரணம், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக துடிப்பது, சோர்வு, முடி கொட்டுதல், உடல் முகம் மற்றும் நாக்கு வெளுத்து போதல், உடல் நலக் குறைவு போன்றவையெல்லாம் ரத்த சோகையின் அறிகுறிகள். இப்படியான அறிகுறிகளை உணரும் போது உடனடியாக அதற்குத் தீர்வு காண்பது அவசியம்.
அனீமியாவை எந்தெந்த உணவுகள் போக்கும் என்பதைப் பார்ப்போம்.
பச்சைக் காய்கறிகள்
கீரைகள், ப்ரக்கோலி மற்றும் பச்சை காய்கறிகளில் க்ளோரோஃபில் அதிகம் இருப்பதால் அதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். இவற்றை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். சரியாக வேகாமல் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்காது. தவிர அஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்.
செம்பு
இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கிறது. உடலில் சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. செம்பு (தாமிரம்) பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால், ரத்த சோகை குறைந்து முடி கொட்டுவதும் தடுக்கப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் செம்புப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தினார்கள். தற்போது செம்பு உலோகத்தில் வாட்டர் பாட்டில்கள் வந்துவிட்டன. முடிந்தவரை அதில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
எள்
எள்ளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. முளைக்கட்டிய எள், எள்ளுருண்டை, எள்ளுப் பொடி, எள்ளு சாதம் என தினமும் எள்ளை உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். உதிரப்போக்கு காரணமாக ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிகம் இரும்பு சத்து குறைபாடு வரக்கூடும். எனவே எள்ளை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகையை விரட்டலாம்.
வைட்டமின் சி
ரத்த சோகை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சீரழித்துவிடும். தினமும் விட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து கிடைக்கும். காலையில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து ஒரு டம்ளர் குடித்து வருவது நன்மைப் பயக்கும். அதேபோல் மாதுளை பழத்தில் கால்சியம், இரும்புசத்து, புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதனை தினசரி சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் கிடைக்கும்.
ஃபோலிக் அமிலம்
வைட்டமின் பி என்பது தான் ஃபோலிக் அமிலம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். கீரை வகைகள், கடலை, வாழைப்பழம் போன்றவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...