உண்டு, உறைவிடப்பள்ளிகளில்,
துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், தங்கி படிக்கும் குழந்தைகள் பராமரிப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.உடுமலை அருகே, கரட்டுமடம், லிங்கம்மாவூர், அமராவதிநகர், திருமூர்த்திநகர் மற்றும் மடத்துக்குளத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 18 மலைவாழ் கிராமங்கள் மட்டுமின்றி, வால்பாறை, மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் குழந்தைகள், இந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்க வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.அரசு பள்ளிகளில், வளாகத்துாய்மை மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியத்தையும் அரசு வழங்குகிறது.உண்டு உறைவிடப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர் என ஒருவரும் இல்லை. ஆசிரியர்கள், பள்ளிக்கு அருகில் யாரேனும் ஒருவரை தற்காலிகமாக நியமித்து, ஊதியம் வழங்கி, துாய்மைப்பணிகளை மேற்கொள்கின்றனர்.இருப்பினும், தற்காலிக பணியாளர்களும் தொடர்ந்து வர மறுக்கின்றனர். வளாகத் துாய்மைப்பணிகளை மேற்கொள்ளும் போது, கழிப்பறை துாய்மைப்பணிகளை செய்வதில்லை. இவ்வாறு, உறைவிடப்பள்ளிகளில் சுகாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகிறது.பிறரிடம் அச்சமின்றி பேசுவதைக்கூட, மலைவாழ் கிராம குழந்தைகள், பள்ளிக்கு வந்த பின்னரே, கற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில், குழந்தைகளின் சுகாதாரத்தை பராமரிப்பதும் இப்பள்ளிகளில் சிக்கலாகவே உள்ளது.இங்குள்ள குழந்தைகளுக்கு, காலையில் பல் துலக்குவது முதல், இரவு கழிப்பறை சென்று வரும் வரை, ஒருவரின் கண்காணிப்பும், பராமரிப்பும் தேவையாக உள்ளது. இங்கு உதவியாளர்களும் ஆண்களாக இருக்கின்றனர். சில பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்களும் ஆண்களாகவே உள்ளனர். இத்தகைய பள்ளிகளில், பெண் பராமரிப்பாளர்களும் தேவையாக உள்ளது. மேம்பாட்டுக்கு, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பள்ளிகள் துவங்கியதன் நோக்கம் நிறைவேறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...