கோவை 'ரோட்டரி சென்ட்ரல் ஆன்ஸ் கிளப்'
மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் 'ஸ்பிக்மேகே' சார்பில்,
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 'ஸ்வஸ்த் 2018' எனும் பயிலரங்கு,
சின்னவேடம்பட்டி பிரஷாந்தி அகாடமியில் நேற்று நடந்தது.
பயிலரங்கு குறித்து, ரோட்டரி கவர்னர் பதி
கூறுகையில், ''இது, கவனிக்கப்படாத மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின்
உணர்வை, வெளிக்கொண்டு வரும் முயற்சி. இந்த பயிலரங்கில் சுவர் ஓவியங்கள்,
களிமண் படிமம் செய்தல், தோல்பாவை கூத்து
ஆகிய மூன்று கலைகளை பிரதானமாக கொண்டு, மாற்றுத்திறன் குழந்தைகளின் அழகியல்
சார்ந்த பார்வையையும், திறமையையும் ஊக்குவிக்கும் பயிற்சி
அளிக்கப்பட்டது,'' என்றார்.
பயிற்சியில், 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...