ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பள்ளிகளில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் அவர்களது மரபணுக்கள்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆரம்பப் பள்ளியில், கட்டாயக் கல்வி முடிவுறும் தருவாயில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன.
ஆனால் ஒரு குழந்தை தொடர்ந்து பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படி பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை.
இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் "இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி" குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன.
இந்த புதிய ஆய்வின்படி இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள்.
இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப் படுத்த முடிந்தது.
இரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணு காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களைக் கணக்கிட முடிந்தது.
ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் தோராயாமாக 50 சதவிகிதம்தான் ஒத்துப்போகின்றன.
அதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல. 'பள்ளிக் கல்வியில் சாதனை' போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.
இதனை வைத்து குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாக தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும்.
70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையில், கல்விச் சாதனையின் தரம் ஒரே மாதிரியாக இருக்கையில், இந்த நிலைத் தன்மையை எந்தக் காரணிகள் நிர்ணயிக்கின்றன என்பதைப் பார்த்தோம்.
70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் - அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகக் கண்டறிந்தோம். மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.
கல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது - அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வதுதான் என்பதைக் கண்டறிந்தோம்.
பள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இரட்டையர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய்மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப்பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு - அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
ஒரு இரட்டையர்களின் தரம் கூடவோ குறையவோ செய்வதற்கு மாறுபட்ட ஆசிரியர்களிடம் கற்பது போன்ற சூழல்கள் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...