பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட்
சலுகைகள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இம்முறை ரூ.100 விலைக்குள் கிடைக்கும் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேன்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. அடிக்கடி சேவைகள் மாற்றப்படும் நிலையில், மீண்டும் ஏழு சேவைகளை மாற்றி இருக்கிறது. ரூ.100-க்கு கீழ் ஏழு சலுகைகள் மாற்றப்பட்டு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.14 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் 1 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ.40 சலுகையில் 1 ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்டதில் சிறப்பான சலுகையாக ரூ.57 இருக்கிறது. பி.எஸ்.என்.எல். ரூ.57 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.68 சலுகைக்கு 2 ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
வாரயிறுதியில் வெளியூர் செல்வோருக்கு ரூ.78 விலையில் 4 ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.82 சலுகையில் 4 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பிரத்யேக ரிங் பேக் டோன் வழங்கப்படுகிறது. ரூ.85 விலையில் கிடைக்கும் சலுகையில் 5 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Source: Maalaimalar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...