காரைக்குடி அழகப்பா
பல்கலையில் 'கியூ ஆர்' கோடு முறையிலான விடைத்தாள் பரீட்சார்த்த முறையில் நவம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தேர்வாணையர் சக்திவேல் கூறும்போது: அழகப்பா பல்கலையில் விடைத்தாள்கள் தற்போது பார்கோடு மூலம் திருத்தப்பணிக்கு செல்கிறது. இதைவிட அதிக பாதுகாப்பு மிக்க விடைத்தாளை உருவாக்கும் 'என்கிரிப்ட் கியூ ஆர் கோடு' முறையிலான விடைத்தாள்கள் வடிவமைக்கும் பணி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து அழகப்பா பல்கலை தேர்வு துறை கடந்த ஆறு மாதமாக மேற்கொண்டு வந்தது.
பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பரில் அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு கல்லுாரி மற்றும் பல்கலையின் அனைத்து துறைகளுக்கு நடக்கும் தேர்வில் பரீட்சார்த்த முறையில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. மிகுந்த பாதுகாப்பு என்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும். தமிழகத்தில் அழகப்பா பல்கலையில்தான் இது முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது, என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...