ஸ்ரீசுவாமி விவேகானந்தர் வழியில்
புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்று வீடியோ கான்பரன்சிங்கில் கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, நேற்று கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் நடந்தது. இதில், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், மேற்கு வங்க பேளூர் ராமகிருஷ்ண மடத்தின் துணை தலைவர் கவுதாமானந்தஜி மகராஜ், விம்ருதானந்தா மகராஜ், குமரகுரு கல்வி நிறுவன துணை தலைவர் சங்கர் வானவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிகாகோவில் கடந்த 1893 செப்டம்பர் 11ம் தேதி சுவாமி விவேகானந்தர் பேசிய அந்த நேரத்தில், வீடியோ கான்பரன்சிங் முறையில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, கோவை நிகழ்ச்சியில் பேசியதாவது:
விவேகானந்தர் உரை தற்போதைய தேவையை நாட்டிற்கு உணர்த்துகிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. அன்று சுவாமி விவேகானந்தர் பேசிய வார்த்தைகள் இன்றைய திறமைமிக்க இளைஞர்களிடம் காணப்படுகிறது. அந்த வார்த்தைகள் அனைத்து சாவல்களுக்கும் தீர்வாக உள்ளது. அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் அடல் டிங்கரிங் ஆய்வு கூடம் அமைக்கப்படும். எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். விவேகானந்தர் கண்ட பொருளாதார மேம்பாட்டை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரின் கருத்துகளே அவரை திரும்பி பார்க்க வைத்தது. இந்திய விடுதலைக்கு அச்சாரமிட்டவர் சுவாமி விவேகானந்தர். விடாமுயற்சி இருந்தால் சாதிக்க முடியும் என்பதை ஆசிய விளையாட்டு போட்டியில் நம் வீரர்கள் பதக்கம் வென்று சாதித்துள்ளதை பார்க்கலாம். சுவாமி விவேகானந்தர் வழியில் புதிய இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...