துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நிபந்தனைகள்


*மாணவியர்,
துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது
*சென்னை, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைமுடிந்துள்ளது
*புதிய மாணவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், ஒருங்கிணைப்பு பயிற்சி துவங்கியது
*அதில், புதிய மாணவர் கள், பல்கலை மற்றும் கல்லுாரி வளாகத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
*சீனியர்' மாணவர்கள், 'ஜூனியர்' மாணவர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
*இதற்காக, அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கட்டடவியல் கலை படிப்புக்கான, 'ஆர்கிடெக்ட்' கல்லுாரி வளாகங்களில், ராகிங் தடுப்பு வாகனம், ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது
*பல்கலையின் வளாகத்தில், ராகிங் தடுப்பு குழுவினர், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அதேபோல், மாணவ - மாணவியருக்கு, சுய ஒழுக்கம் தொடர்பான, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன
அதன் விபரம்
*வளாக பகுதிகளில், அரட்டை அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது; வகுப்புகளை புறக்கணிக்காமல், பங்கேற்க வேண்டும்
*மாணவ மாணவியரிடம் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
*பல்கலை வளாகத்திற்குள், காதில், 'ஹெட் போன்' கருவி அணிந்து வரக் கூடாது
*மொபைல் போன், 'ஹெட்செட்டை' கல் லுாரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களும், மாணவி யரும், கைக்குட்டை மற் றும் துப்பட்டா போன்ற வற்றால் முகத்தை மூடி, வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது
*வாகனத்தில் வரும்போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்தால், அதில், முகத்தை மூடும் கண்ணாடியை, திறந்து விட்டிருக்க வேண்டும்
*ஒவ்வொரு மாணவியும், அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்
*பேராசிரியர்களும், பல்கலை ஊழியர்களும், காவலாளிகளும், அடையாள அட்டையை காட்டச் சொன்னால், மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும்
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

Share this