அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு

"நாடு முழுவதும் பணியாற்றும்,
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 'ஆஷா' எனப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்," என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அங்கன்வாடி மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று உரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யக் கூடிய, மிகவும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது.

Share this