காலாண்டு
தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று
காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ்
2 வரையுள்ள மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு
துவங்கியது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு,
வரும், 17ல் தேர்வு துவங்க உள்ளது.
இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வழங்கும் வகையில், பள்ளி கல்வியின் வினாத்தாளை பயன்படுத்த, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 படிப்புக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.அதேபோல், 'ப்ளூ பிரின்ட்' என்ற வினாத்தாள் கட்டமைப்பு முறையும் நீக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யவும், தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Good keep it up
ReplyDeleteMy name is sivam
ReplyDelete