காலாண்டுத் தேர்வு புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்தி வைப்பு - வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

இன்று மாலை சுமார் 2 மணிநேரம்
முதன்மைக் கல்வி அலுவலர்,வருவாய் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்திய பேச்சுவார்த்தையில் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கையினை ஏற்று

பாதிக்கப்பட்ட 5 ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் பள்ளியில் மாறுதல் வழங்கியுள்ளார்.

ஆசிரியர்களின் மன குமுறலையும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பையும் வலியுறுத்தி நாளை மாலை 4 மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில்  அனைத்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்  மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து  வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்க இசைந்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசிரியர்களை தாக்கியவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நகலை வழங்கியுள்ளனர்.

மேலும் ஒரு வார கால காலஅவகாசம் கேட்டு கொண்டதற்கிணங்க,

நாளை 10.09.2018 திங்கள்கிழமை நடக்கவிருக்கும் காலாண்டு தேர்வு - தேர்வு பணியை புறக்கணிக்க இருந்ததை தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
நாளை காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று காலாண்டு தேர்வை எவ்வித தயக்கமும்,சுனக்கமும் இன்றி நடத்த ஒத்துழைக்குமாறும் நாளை மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்

வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு

Share this