இளம் விஞ்ஞானி விருது பெற்ற தொழிலாளி மகன்

தேசிய அறிவியல் கண்காட்சியில்
பங்கேற்க ஆர்வம்
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே 3 முறை இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர், புதுடெல்லியில் நடக்கும் தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்திடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (45). கூலித்தொழிலாளி.
 இவருடைய மகன் சக்திவேல் (16). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் கண்டுபிடிப்பில் அதீத ஆர்வம் உண்டு. ஆறாம் வகுப்பு முதலே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வந்தார். அப்போது, சூரிய ஒளியிலிருந்து செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் நூதன முறையை கண்டுபிடித்தார்.

Share this