பள்ளி அரை நாள் மட்டும்
வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்!!
பள்ளியை பூட்டிச் சென்ற தலைமை ஆசிரியரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள நூருந்துசாமிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் கிருஷ்ணமூர்த்தி.
இவர், கடந்த, 14ல் மதியம் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு, யாருக்கும் தெரியாமல் பள்ளியை பூட்டிச் சென்றார். இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரியிடம், பெற்றோர் புகாரளித்தனர். விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேன்கனிக்கோட்டை டி.இ.ஓ., சேகருக்கு, சி.இ.ஓ., உத்தரவிட்டார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பள்ளியை மதிய நேரத்தில் பூட்டிச் சென்ற, தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை, சஸ்பெண்ட் செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...