அரசு பள்ளிகளை பாதுகாக்க G.V பிரகாஷின் புதிய முயற்சி - குவியும் பாராட்டுகள்


மருத்துவம், கல்வி போன்ற மக்களுக்கு
தேவையான சேவைகள் தனியார் மயமாகி வருகிறது. அதிலும் கல்வி துறை மக்களை அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் இருந்த அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால், மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
விளைவு தமிழகம் முழுவதும் சுமார் 850 அரசு பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் இப்பள்ளிகள் மூடப்படலாம் என்பதனால், பொது மக்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என நடிகர் G.V பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தது வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த முயற்சியில் தனது பங்களிப்பாக, சென்னையில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றின் LKG, UKG பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தை தான் வழங்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ட வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
அவரின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share this