ஜே.இ.இ.,
நுழைவு தேர்வுக்கு வருவோர், 'குட்கா' மற்றும் சூயிங்கம் மெல்ல, தடை
விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங்
படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய
அரசின், தேசிய மேம்பாட்டு முகமையான, என்.டி.ஏ., சார்பில், இந்த தேர்வு,
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்ட,
ஜே.இ.இ., பிரதான தேர்வு, ஜன., 6 முதல், 20 வரை, 'ஆன்லைன்' வாயிலாக
நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கியது. வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்த அறிவிப்பை, என்.டி.ஏ., வெளியிட்டுஉள்ளது.
தேர்வர்கள், ஆன்லைன் முறையில் தேர்வு எழுத வேண்டியுள்ளதால், பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்களை, தேர்வு அறைக்கு எடுத்து வர அனுமதியில்லை. கணித உபகரண பெட்டி, மொபைல் போன், காதில் பொருத்தும், 'மைக்ரோ ஸ்பீக்கர், பேஜர், கால்குலேட்டர், கேமரா' உள்ளிட்ட, எந்த பொருட்களையும், தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல கூடாது நீரிழிவு பிரச்னை உள்ள மாணவர்கள், மாத்திரை, பழங்கள், தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லலாம். ஆனால், நொறுக்கு தீனி எடுத்து வர அனுமதியில்லை தேர்வு மைய வளாகத்திற்கு வருவோர், முழுமையாக சோதனை செய்யப்படுவர். அவர்கள், புகையிலை, குட்கா மற்றும் சூயிங்கம் போன்றவற்றை சுவைக்கவோ, எடுத்து வரவோ கூடாது. கண்டுபிடிக்கப்படும் மாணவர்கள், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...