பள்ளி விடுமுறை எடுக்க தினம்தினம் புதுப்புது காரணம் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு மத்தியில், மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பள்ளி பருவம் முழுவதையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாகவே தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாணவர்களை விட, மாணவிகள் விடுமுறை எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அனைத்து சோதனைகளையும் கடந்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுப்பே எடுக்காமல், வெற்றிகரமாக தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார் மதுரையை சேர்ந்த மாணவி கார்த்திகா.
மதுரை மாவட்டத்தில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அருஞ்சுணை - நவீனா தம்பதியரின் இரண்டாவது மகள்தான் மாணவி கார்த்திகா. இவர்கள் அரசி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் சென்றுள்ளார். ஒவ்வொரு வருடம் இவரை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, பள்ளிக்கு இனி விடுப்பு எடுக்கப்போவதில்லை என்று மாணவி தீர்மானித்தார். இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு, நடந்த ஒரு விபத்தில், மாணவி கார்த்திகாவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் விடுமுறை எடுக்காமல், கையில் கட்டுகளோடு பள்ளி சென்று ஆசிரியர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதுகுறித்த செய்திகள் வெளியானதால் அனைவரும் மாணவி கார்த்திகாவை பாராட்டி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...