எம்.பி.ஏ., படிப்பு நடத்தும்
கல்லுாரிகள் அனுமதி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.சென்னை பல்கலையின் இணைப்பில், 138 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லுாரிகளில், பல்வேறு வகை படிப்புகளுக்கு, அந்தந்த படிப்புக்கான அங்கீகார அமைப்பிடமும், சென்னை பல்கலையிலும், அனுமதி பெற வேண்டும்.இந்நிலையில், எம்.பி.ஏ., என்ற முதுநிலை மேலாண் படிப்பு மற்றும் எம்.சி.ஏ., என்ற, முதுநிலை கணினி அறிவியல் படிப்புகளை நடத்தும் கல்லுாரிகள், சென்னை பல்கலையின் இணைப்புக்கு, விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும் கல்லுாரிகள், அபராத கட்டணத்துடன், டிச., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...