NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.09.19

திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

விளக்கம்:

எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

பழமொழி

Anything valued where it belongs.

 எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மரியாதை .

இரண்டொழுக்க பண்புகள்

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி

நற்பண்புகளே மகிழ்ச்சியின் ஆதாரம், என்பதை மனம் உணர்ந்துவிட்டால்  வெற்றியின் பாதையில நாம் பயணிக்கலாம்..

---- அறிஞர். டால்ஸ்டாய்

பொது அறிவு

1. விண்வெளி வீரர்கள் ஆக்சிஜன் பெற உதவும் பாசி எது?

குளோரெல்லா.

2. நீரை சுத்திகரிக்கப் பயன்படும் பாசி எது?

 கிளாமிடோமோனஸ்

English words & meanings

Kelvin - an engineer and scientist. One of the Unit of temperature
கெல்வின் என்னும் அறிவியல் அறிஞர் மற்றும் பொறியியலாளர். இவரின் பெயரால் வெப்பத்தின் மூன்று அலகுகளில் ஒன்றான கெல்வின் பெயரிடப்பட்டுள்ளது.

Knight - a title given by the King to a man for his bravery
தன்னுடைய வீர தீர செயல்களுக்காக ஒரு வீரனுக்கு அளிக்கப் படும் ""வீரப் பெருந்தகை"" எனும் பட்டம் .

ஆரோக்ய வாழ்வு

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைச் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி, சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும் .

Some important  abbreviations for students

* Int - Interior

* Ext - Exterior

நீதிக்கதை

புள்ளிமான்கள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

07.09.2019

* இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

* ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உடல் நல குறைவால் நேற்று காலமானார்.

* நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

* ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான முகமது நபி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Today's Headlines

🌸 The mission to select astronauts under ISRO's Kaganian program is underway.

 🌸 Former Zimbabwe President Robert Mugabe passed away, yesterday, due to ill health.

 🌸 The water level of the Papanasam and Cervalaaru Dams has risen by 3 feet due to heavy rains in the Nellai district.

 🌸Spaniard Rafael Nadal advanced to the semifinals of the singles event of the US Open tennis

 🌸 All-rounder Mohammad Nabi, Afghanistan's top spin bowler, has announced his retirement from Test cricket.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive