RTE பற்றிய புரிதல் இல்லாமல்
நியமிக்கப்பட்ட 1500 ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வில் வந்த சுமார் 1000
ஆசிரியர்களுக்கும் காலாண்டு விடுமுறையில் TET புத்தாக்கப்பயிற்சி தர
வேண்டும் என TASTA வேண்டுகோள் விடுக்கிறது.
"RTE
Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக
பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.
தமிழகத்தில்
RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக
பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள்
அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
எடுத்துக் கூறப்பட்டது.
அதனால்
16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500 அரசு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , அரசு
பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை
என்று கூறப்படுகிறது.
இதுவே முதல் முரண்பாடு.
23/8/10
முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு
அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1500
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,
கடந்த
2018 வரை RTE பற்றி தெரிந்தும் ஆசிரியர் அல்லாத ( Non - Teaching )
பணியில் சேர்ந்தவர்களுக்கு TET இல்லாமலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு தந்து வருவது அதீத முரண்பாடு.
RTE act அடிப்படையில் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு அனைத்திற்கும் TET அவசியம். 23/8/10 க்குப் பிறகு
Non
teaching லிருந்து teaching பதவி உயர்வு பெற இடைநிலை ஆசிரியர் என்றால்
TET PAPER 1 ம், பட்டதாரி ஆசிரியர் என்றால் TET PAPER 2 ம் தேர்ச்சி பெற
வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் பதவிஉயர்வுகள் நடைபெற்று வருகின்றன.
அரசு உதவிபெறும் பள்ளிகளில்,
Teaching- to- Teaching
பதவி
உயர்வுகளின் போது நிபந்தனைகள் தளர்வு இருப்பினும், Non- Teaching to
Teaching பதவி உயர்வில் TET நிபந்தனைகள் உண்டா? இல்லையா? என்ற தெளிவான
அரசாணை இன்றுவரை பிறப்பிக்கப்படவில்லை.
ஆகவே
TET பற்றி தெரியாத (23/08/10 - 16/11/12) காலகட்டங்களில் பணியில் சேர்ந்த
ஆசிரியர்கள் மற்றும் TET பற்றி தெரிந்த காலகட்டத்தில் பதவி உயர்வு பெற்ற
சுமார் 1000 ஆசிரியர்கள் பணி நியமனங்களிலும் தமிழக அரசு ஒப்புதல்
அளித்ததன் மூலம் ஒருசில தவறுகள் நேர்ந்துள்ளது.
இதை
சரிசெய்யும் பொருட்டு தற்போது ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் வரும்
காலாண்டு விடுமுறையில் புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும்
விலக்கு அளிக்க கொள்கை முடிவினை தமிழக அரசு மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும். அதுவே சரியான தீர்வாகவும்
அமையும். இதை தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல் கருணை உள்ளத்தோடு செயல்பட
வேண்டும் " என TASTA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு
வேண்டுகோள் விடுப்பதாக அதன் மாநில பொருளாளர் திரு. திரவியம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...