தமிழகத்தில், புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கான அரசாணையை,
தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதில், கட்டுமான செலவுக்கு ஏற்ப, மாநில அரசின்
நிதி உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 26 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.மருத்துவ கல்லுாரி இல்லாத, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில், தலா, 325 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிக்கும், மத்திய அரசு, 195 கோடி ரூபாய்; மாநில அரசு, 130 கோடி ரூபாய் என, 325 கோடி ரூபாய் நிதி வழங்கும் என, அறிவிக்கப்பட்டது.இதன் வாயிலாக, மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 32 ஆகவும், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 4,500 ஆக உயரும்.
இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசாணையில், அந்தந்த கட்டுமான பணிகளுக்கு ஏற்ப, மாநில அரசின் நிதி உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், முதல் கட்ட பணிகளுக்காக, தலா, 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...