மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் எழுதும் நேர்முக கடித வேண்டுகோள்.
பொதுமக்கள் கொண்டாடுகின்ற விழாக் காலங்களில் மாணவர்களின் நலன், பெண் ஆசிரியர்களின் நலன், ஊழியர்களின் நலனை கருத்திற்கொண்டு விடுமுறையினை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருவது பாராட்டுக்குரிய நடைமுறையாக இருந்து வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் 14-ம் தேதி போகிப் பண்டிகை தினம் ஆகும். தற்போது விடுமுறை பட்டியலில் பள்ளி வேலை நாளாக இருந்து வருகிறது. மாணவர்களின் வருகை குறைவு பெரிதும் பாதிக்கும் என்பது பள்ளிக்கல்வித்துறை அறிந்த ஒன்றுதான். அது போல் 90 விழுக்காடு பெண் ஆசிரியைகள், ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து 14 ஆம் தேதி அன்று விடுமுறையாக அறிவித்து உதவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் வேண்டுகோளாகவும் தங்களை பெரிதும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களையும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களையும் நாம் கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் மிக விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார்கள்.
தங்களின் நல்ல அறிவிப்பிற்கு நன்றியுடன்,
வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...