மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய கட்டுரைப் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கடமைகள் பற்றி மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் , 2 - வது கர்த்தவ்ய ( கடமை ) தேசிய கட்டு ரைப் போட்டியை நடத்துகிறது . ‘ நமது தேசிய சுதந்திரப் போராட் டத்தை ஊக்கப்படுத்திய உன்ன தமான கொள்கைகளை மதிப் பதும் , பின்பற்றுவதும் ' என்பதே இந்தப் போட்டிக்கான தலைப்பு . உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியரும் இதில் கலந்துகொள்ளலாம் . விண்ண ப்பதாரர்கள் kartavya . ugc . ac . in என்ற இணையதளமுகவரியில் விண்ண ப்பிக் கலாம் . ஜன . 27 - ம் தேதி நடைபெற விருக்கும் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாளாகும் . இதற்கான அனுமதி அட்டை 21 - ம் தேதி வழங்கப்படும் . ஆங்கிலம் அல்லது இந்தியில் கட்டுரை எழுதலாம் . பிப் . 11 - ம் தேதி முடிவுகள் வெளியிடப் படும் . சான்றிதழ்களோடு , ரூ . 15 ஆயிரம் , ரூ . 12 ஆயிரம் , ரூ . 10 ஆயிரம் , ரூ . 7 , 500 என 4 பரிசுகள் வழங்கப்படும் .
போட்டிக்கான மேலும் விவரங்க ளை ntaessay @ gmail . com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ளலாம் . மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...