ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ விபத்தால் 50 கோடி உயிரினங்கள் பலியாகக் கூடும் என தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்ந்து பரவி வருகின்றது. அந்நாட்டின் கோமா பிரதேசத்தில் இரு காங்கருகள் புகை நிறைந்த புலத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருப்பதை இந்நிழற்படங்கள் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் தட்ப வெப்ப நிலை, 40 திகரி செல்சியஸுக்கு மேல் தாண்டியுள்ளது. மேலும், கடும் காற்றுடன், காட்டுத் தீ மேலும் பரவி வருகின்றது.
சிட்னி பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்தத் தீ விபத்தினால், பறவைகள், பாலூட்டி இன விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள் என சுமார் 50 கோடி உயிரினங்கள் பலியாகக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில விலங்குகளும் தாவரங்களும் அழியும் அபாயத்தில் உள்ளன என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...