Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5,8 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.




அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , பார்வையில் காணும் கடிதங்களில் தெரிவித்தவாறு . ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தங்கள் மாவட்டத்திலுள்ள Cluster Resource Centre ( CRC ) ஆக செயல்படும் பள்ளிகள் . அப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட ( பள்ளி எண் | UDISE CODE ) பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை , 11 . 01 . 2020 முதல் 25 . 01 . 2020 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யவும்.மேலும் இணைக்கப்படாத அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சம்பந்தப்பட்ட CRC மையத்தில் இணைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேற்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வினாத்தாட்கள் அச்சிட்டு வழங்கப்படுமாதலால் , தமிழ்நாடு பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .மேலும் இத்துடன் இணைப்பில் கண்டுள்ள சான்றிதழினை கையொப்பமிட்டு , ஸ்கேன் செய்து அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இவ்வலுவலக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்வது குறித்து சந்தேகங்கள் எழும் பட்சத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive