NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூலக வாசிப்பு திட்டதை செயல்படுத்தும் அரசு நிதியுதவி பள்ளி!

கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த
மாவட்டம் விருதுநகர் .பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான இந்த மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமம் தான் "வத்திராயிருப்பு ".


அந்த வத்திராயிருப்பில் ஏறத்தாழ 140 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது "இந்து மேல்நிலைப்பள்ளி".

 இந்தப் பள்ளியில் 1500 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர் .
சர் .சி .வி .ராமன் அவர்களுடன் இணைந்து "ராமன் விளைவுக்காக" செயலாற்றிய தேசிய விஞ்ஞானி டாக்டர் .கே .எஸ். கிருஷ்ணன் அவர்கள் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள பள்ளி இது.

 இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்தப் பள்ளியில் படிப்பதை மிகப்பெரிய பெருமையாக நினைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைவரும் இங்கு சேர்ந்து படிக்கின்றனர். கடந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 102 மாணவர்கள் மொத்த எண்ணிக்கையில் கூடியிருப்பது இதற்குச் சான்றாகும் .

ஆங்கில வழிப் பிரிவு, தமிழ்வழிப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கு செயல்படுகிறது.

 பள்ளி நிர்வாகம் மிகவும் சிறந்த முறையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிர்வாகிகளில் பெரும்பாலோனோர் இதே பள்ளியில் படித்து  பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு எஸ்.ராஜசேகரன் அவர்கள் இதே பள்ளியில் படித்து ஆசிரியராகப் பணியாற்றி பின்பு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 அரசு பொதுத்தேர்வுகளான 10, 11 ,மற்றும் 12ம் வகுப்பில் ஆண்டுதோறும்  நல்ல தேர்ச்சி விகிதத்தை இந்தப் பள்ளி பெற்றுள்ளது.

 அதுமட்டுமல்ல ஊரகத் திறனாய்வு தேர்வு ,தேசியத் திறனாய்வு தேர்வு மற்றும் நீட் தேர்விலும் இந்தப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


 திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உதவியால் இந்தப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

 பள்ளியின் பழைய மாணவர்கள் உதவியால் இங்கு ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது.

 முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் மிகப்பெரிய கலையரங்கமும், எல்லா வகுப்புகளுக்கும் மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


 பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பள்ளி நிர்வாகம் 20 கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது.

 அதுமட்டுமல்ல சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்கு போக்குவரத்து ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மிகக் குறைந்த கட்டணத்தில் வாகன வசதிகளை வழங்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.


 ஆண்டுதோறும் ஒன்றிய அளவில் ஓவியக் கண்காட்சி இந்தப் பள்ளியில் நடத்தப்பட்டு மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வளர்க்கப்படுகிறது.

 அது மட்டுமல்ல பள்ளியில் இயங்குகின்ற மன்றங்கள் மூலமாக மாணவர்களது தனித்திறமைகள் வளர்க்கப்படுகின்றன.

மேலும் இந்தப் பள்ளியில் நூலக வாசிப்பு திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதத்திலும் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் மாணவர்களுக்கு பிரார்த்தனை கூட்டத்தில் வைத்து பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். 

 பள்ளி தலைமையாசிரியர் பெற்றோர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல்களை கொடுத்து வருகிறார் .தேர்வு நேரங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அதிகாலை 5 மணிக்கு தொலைபேசி மூலம் எழுப்பி படிக்கவைக்கிறார்.
 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனது செலவிலேயே சிற்றுண்டி வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

 பள்ளி தலைமையாசிரியர் வணிகவியல் பாடத்தில் மாவட்ட கருத்தாளராக செயல் பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மேடைப் பேச்சாளராகவும் நாளிதழ்களில் சமூக அக்கறையுடன் கூடிய எழுத்தாளராகவும் இருந்துவருகிறார் .தனது பணிக்காக இதுவரை இவர் 15 விருதுகளைப் பெற்றுள்ளார்.

 பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மிகச்சிறந்த சான்றோர்களை அழைத்துவந்து மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது பள்ளி நிர்வாகம்.

 பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விருதுநகர் கைப்பந்து கழகத்தின் பங்களிப்புடன் மின்னொளி மைதானம் அமைக்கப்பட்டு வாலிபால், பூப்பந்து, தடகளம், கபடி போன்ற விளையாட்டுகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகின்றன.
இத்தனைக்கும் மேலாக ஜனவரி 2020 இல் ஆந்திராவில் நடைபெற்ற SGFI பூப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக 14 வயதுக்கு உட்பட்டோர் ,17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவிலும் இந்தப் பள்ளியின்  நான்கு மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் பெற்று ஒவ்வொரு மாணவரும் தமிழக முதலமைச்சரின் கரங்களால் தலா இரண்டு லட்ச ரூபாய் பரிசாகப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களது கல்வியிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்வம்  காட்டி வருகின்றனர்.

 பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல்நலம், கல்வி ,ஒழுக்கம் ஆகியவற்றிலும் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் இதர துறைகளிலும் இந்தப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர் .

தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்களின், பெற்றோர்களை அழைத்து பிரார்த்தனை கூட்டத்திலேயே பெருமைப் படுகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் தற்பொழுது அதி நவீன கழிப்பறை கட்டுகின்ற பணியை செய்து வருகின்றனர் .இது தவிர இந்த பள்ளியில் யோகா, துப்பாக்கி சுடுதல் போன்ற பிரிவுகளில் மாவட்ட அளவில் சாதனை பெற்ற தனித் திறன் வாய்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.

 மாநிலத்திலேயே இந்தப் பள்ளியை மிகச்சிறந்த பள்ளியாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளி தலைவர் திரு ரமா காந்தன், செயலர். திரு.சங்கர கிருஷ்ணமூர்த்தி, பள்ளி உறுப்பினர்கள், தலைமையாசிரியர், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் அலுவலக நண்பர்கள் ஆகிய அனைவரும் இணைந்து செயல்படுகின்றனர் .

கூட்டு முயற்சியால் தான் எதையுமே சாதிக்க முடியும் என்பதற்கு இந்தப் பள்ளி ஒரு எடுத்துக்காட்டு...









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive