கோவை
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், ராமநாதபுரம் மாநகராட்சி
மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை மற்றும் பல் மருத்துவ முகாம்
நடந்தது.
470 மாணவ, மாணவியருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ராமகிருஷ்ணா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் பரிசோதனை செய்தனர்.
நல்ல தண்ணீரில் அடிக்கடி, கண்களை கழுவ வேண்டும். பஸ்களில் செல்லும்போதும், படுத்திருக்கும் போதும் படிக்கக்கூடாது. டிவி, கம்ப்யூட்டர்களை மிக அருகில் பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு நாளும் இருமுறை பல் துலக்க வேண்டும். பற்களில் கறை ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி கல்வி அலுவலர் வள்ளியம்மாள், உதவி நிர்வாக பொறியாளர் கருப்புசாமி, ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...