ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20 ஆம் கல்வியாண்டு
அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு
பயிலும் மாணவர்கள் - ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் -
ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு
ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்குதல் - சென்னை மாவட்ட CEO
செயல்முறைகள்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் சார்ந்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பணிமனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே சென்னை மாவட்டத்தின் சார்பில் அரசு / சென்னை / ஆதிந உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆங்கிலப்பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 22 - 01 - 2020 மற்றும் 23 - 01 - 2020 அன்றும் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது . எனவே அனைத்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் அட்டவணையில் கண்டவாறு பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...