மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்குரிய கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் USER ID ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களுக்கான தேர்வுமையங்கள் / இணைப்புப்பள்ளிகள் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் .
திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை கருப்பு மையினால் மட்டுமே உரிய தேர்வு மையத்திற்கு கீழே குறிப்பிட வேண்டும் . திருத்தங்கள் ஏதும் இல்லை எனில் Correction Nil எனக் குறிப்பிட்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று , அப்பக்கங்களை மட்டும் ஸ்கேன் செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சலில் ( dgeb3sec @ gmail . com ) 27 . 01 . 2020 - க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
இப்பணி , மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்விற்கு மிகவும் அடிப்படையான மிக முக்கியமான பணி என்பதால் இத்திருத்தங்களுக்கு பிறகு எவ்வித மாற்றமும் இல்லாமல் , தாங்கள் தனிப்பட்ட கவனத்துடன் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் / நேர்முக உதவி அலுவலர்கள் / கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் பிரிவுப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் .
மார்ச் ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்கு தங்கள் மாவட்டத்தில் எழுதவுள்ள எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் ( துவக்க அனுமதி பெற்று முதன் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் புதிய பள்ளிகள் உட்பட ) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ( Cancellation Centre தவிர ) இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தேர்வின் சமயம் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் . இதில் தவறு ஏதும் ஏற்படின் தாங்களே முழுபொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . இத்துடன் இணைத்து அனுப்பப்படும் சான்றினை கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் பட்டியலில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் ' மாற்றம் ஏதுமில்லை என்ற அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .
மேலும் 27 . 01 . 2020 தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்தவொரு திருத்தமும் ( பள்ளியின் பெயர் , இணைப்பு பள்ளி மாற்றம் ) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தேர்வு மைய பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் பின்னர் கண்டறியப்படின் அதற்கு மாவட்டக் கல்வி அலுவலரே முழுபொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...