NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரிபர்களின் அவ நிலை மாறுமா? - Inspector

அண்மையில் அரசு பள்ளி மாணவர்கள்,
ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்ட எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றிற்கு பாதுகாப்பு அலுவலுக்கு நான் சென்றிருந்தபோது, அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் உடன் வந்த பெண் ஆசிரியர்களிடம் எயிட்ஸ் பற்றியும், அது வராமல் தடுப்பதற்கான தற்காப்பு முறைகளை பற்றியும் கேலியோடும், கிண்டலாகவும் சந்தேகம் கேட்கிறோம் என்ற பெயரில் விரசமாக பேசிக்கொண்டு வந்ததை கேட்டபோது மனது மிகவும் வேதனையானது.
       இவர்களை கண்டிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடத்துடன் இருந்த அந்த பெண் ஆசிரியைகளை பார்த்தாலோ மிகவும் பரிதாபமாக இருந்தது.
       உடனே நான் அந்த மாணவர்களிடம் "இது பற்றிய சந்தேகம் உனக்கிருந்தால் உன் சகோதரியிடமோ, உன் தாயாரிடமோ கேட்டு தெளிந்து கொள்ளலாமே" என்றவுடன், அடுத்த விநாடி அத்தனைபேரும் ஓடியே போய்விட்டார்கள்.
      இன்றைய அரசு பள்ளி, கல்லூரி  மாணவர்களை  நினைத்தால் இவர்களின் பெற்றோர்கள் எப்படித்தான் இம்மாதியான பிள்ளைகளை பெற்றுவிட்டு, வளர்க்கத் தெரியாமல் வளர்த்து அரசு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களோ என்று கோபமாக வருகிறது... 
        அரசு பள்ளிகளில், கல்லூரிகளில்  கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக எத்தனை, எத்தனை பிரச்சினைகள் உள்ளன என்று ஆராய்வதும் நம் கடமையாகிறது. 
        ரிசல்ட் வரவில்லை என்று நாம் அவர்களை கரித்துக்கொட்டுகிறோமே, அதற்கான காரணங்களை நாம் என்றாவது ஆராய்ந்திருக்கிறோமா? 
       பணிவு என்ற அடிப்படை குணம் ஒரு மாணவனிடம் இல்லையென்றால் அவன் எப்படி ஆசிரியர்களை மதிப்பான்? 
        அவனுக்கு எப்படி இந்த ஆசிரியர்களால் போதிக்க முடியும்?
        பொறுப்பற்ற பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்படும் பிள்ளைகள், அதே தன்மையுடன் பள்ளிக்கும் வருகிறார்கள்.
        ஆசிரியர்களை jokers போலவும், அவர்களை கலாய்க்கும் மாணவர்களை hero போலவும் சித்தரிக்கும் கண்ட கண்ட சினிமாக்களை பார்த்துவிட்டு, அதில் வரும் heroவாக தன்னை நினைத்துக்கொண்டு அவன் நடந்துகொள்ளும் முறைகளை சமீபகாலங்களாக காணும்போது அவனை தண்டிக்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல், அவனது கேலிகளையும், கிண்டல்களையும் சகித்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாத, கையறு நிலையில் உள்ளவர்களாக இந்த ஆசிரியர்களை நாம் காணும்போது வேதனையாகத்தான் உள்ளது. 
         மீறி அவனை கண்டித்துவிட்டாலோ, தண்டித்துவிட்டாலோ மறுநாள் தன் ரௌடிகளுடனோ, பெற்றோர்களுடனோ, ஜாதி சங்கத்து ஆட்களுடனோ, இடதுசாரி மாணவர் சங்கங்களுடனோ, எதிர்கட்சிக்காரர்களுடனோ, நாலு பொறுக்கிகளுடனோ  பள்ளிக்குள்ளும், கல்லூரிக்குள்ளும்  புகுந்து அந்த ஆசிரியரை கேவலமாக கண்டபடி பேசுவது, திட்டுவது, தாக்குவது, கலாட்டா செய்வது, தற்கொலை மிரட்டல்கள் விடுப்பது, காவல்துறை சட்ட நடவடிக்கைகளை காட்டி பயமுறுத்துவது, வீட்டுக்கு செல்லும்போது வழிமறித்து அடிப்பது என ஆசிரியர்கள் இந்த மாணவர்களிடமிருந்து எதிர்கொள்ளும்  அட்டூழியங்களுக்கு அளவேயில்லை.
         பள்ளிகளுக்கு மது அருந்திவிட்டு வருவது, சிகரெட், பீடி பள்ளிகளிலேயே புகைப்பது, ரௌடிகளைப்போல சாதுவான மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பது, பெண் மாணவியர்களை eve teasing செய்வது என எத்தனை ஒழுக்கக்கேடுகளை செய்கிறார்கள்..!
         மேலும் சமீப காலங்களில் பெண் மாணவிகளிடமிருந்து வரும் பாலியல் தொந்தரவு மிரட்டல்கள்  என எத்தனை எத்தனை வகை மிரட்டல்களை தினமும் எதிர்கொள்கிறார்கள்..!
       அதிலும் இந்த பெண் ஆசிரியைகளின் நிலையோ இன்னும் மோசம். மாணவர்களே பெண் ஆசிரியைகளை  eve teasing செய்வது, அவர்களை பார்கக்கூடாத இடங்களில் பார்வைகளை படரவிடுவது என இந்த மாணவர்களின் செயல்களையெல்லாம் பார்க்கும்போது, ஆசிரியர்களின் நிலைமை உண்மையிலேயே  வேதனையாகத்தான் உள்ளது. 
       தேர்வு அறைகளில் காப்பியடிக்க, பிட் அடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களை கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவது, தாக்குவது, தேர்வு  முடிந்தவுடன் ஆசிரியர்களின் சட்டைகளில் இங்க் அடிப்பது போன்ற எத்தனையோ அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள் இன்றைய ஆசிரியர்கள். 
       HM, AEO DEO, CEO என தனது உயர் கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லாத நிலையில் எவன் படிச்சா என்ன, படிக்காட்டா என்ன, எவன் எது செஞ்சா என்ன, மாசம் பொறந்தா சம்பளம் வருதா, கண்டுக்காம போங்க, adjust செய்து கொண்டு போங்க என அறிவுறுத்தப்பட்டு, செய்வதறியாது, கையறு நிலையிலிருக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நிலையை பார்க்கும்போது இந்த மாணவ சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது.
          இத்தனை அயோக்கிய தனங்களை செய்யும் மாணவர்களிடமிருந்து எப்படி நல்ல ரிசல்ட்டை ஒரு ஆசிரியரால் பெற்றுத்தரமுடியும்?
          நல்ல ரிசல்ட் பெற்றுத்தராவிட்டால், மாணவர்களும், கல்வி அதிகாரிகளும், பெற்றோர்களும், ஊடகங்களும், கலவியாளர்களும், இந்த சமூகமும் ஆசிரியர்களை வறுத்து எடுத்துவிடுகின்றன.
       தனியார் பள்ளிகளின் discipline ஐ போல அரசு பள்ளிகளில் கண்டிப்பாக அமல்படுத்தினால் ஒழுங்கீனங்கள் குறையும், பயம் வரும், நல்ல பண்புகள் வளரும், புத்தி தெளியும், நாகரீகம் தெரியும், நல்ல படிப்பு வரும், நல்ல மாணவ சமூகம் மலரும், நன்மக்கள் சமுதாயம் உருவாகும்.
        இத்தனைக்கும் பிறகுதான் நாம் அந்த ஆசிரியர்களிடம் நல்ல ரிசல்ட் பற்றி கேட்க அருகதை உள்ளவர்களாவோம்... 
          என் உடற்கல்வி பெண் ஆசிரியர் திருமதி. Reni Williams மற்றும் என் தம்பியை போன்ற என் உயிர் நண்பர் Kumaravel K, Siva Sankara Raman Iyer, Sures Kumar, Santhavel Kpm,  Jeyalakshmi Maharajan, punitha, Vasantha Sridhar,  Kanthasaki என  இப்படி இன்னும் விடுபட்டுபோன எத்தனையோ எண்ணற்ற நல்லாசிரியர்கள், திறமையாளர்கள் என் நட்பில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் சாஷ்ட்டாங்கமாக  நமஸ்கரித்து அனைவருக்கும் இப்பதிவினை சமர்பிக்கிறேன்.
"குரு பிரம்மா, 
குரு விஷ்ணோ, குருதேவோ மஹேஸ்வரஹா;
குரு சாட்சாத் பரப்பரம்மஹா; தஸ்மை ஸ்ரீ,
குருவே நமஹா...

- ஜெயக்குமார்,  காவல்துறை ஆய்வாளர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive