Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.20

திருக்குறள்


அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போது.

பழமொழி

Do well what you have to do

 செய்வன திருந்தச் செய்.

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

கற்பனைகளை தத்ரூபமாக உருவாக்க முடியும் என்றால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இங்கு உண்மை வடிவம் பெறுகிறது.

பொது அறிவு

1.நமது கண்களில் கண்ணீரை சுரக்கும் சுரப்பி எது?

லேக்ரிமல் சுரப்பி.

2.வாசனைப் பொருட்களின் இராணி என்றழைக்கப்படுவது எது?

ஏலக்காய்.

English words & meanings

 Lichenology – study of lichens. பூஞ்சை பாசி அல்லது லைக்கன்கள் குறித்த அறிவியல் படிப்பு.

Latent - existing but not visible. இருந்தாலும் வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கின்ற.

ஆரோக்ய வாழ்வு

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

SUV - Sports Utility Vehicle

DOA - Dead On Arrival

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

சிங்கத்தை காப்பாற்றிய எலி

குறள் :
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் :
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

கதை :
முன் ஒரு காலத்தில் சிங்கம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. ஒரு நாள் பலமான மதிய உணவினை முடித்து விட்டு ஒரு மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பின், அங்கு வந்த ஒரு எலி சிங்கத்தின் மீது விளையாட தொடங்கியது.

திடீரென்று சிங்கம் கோபத்துடன் எழுந்து அதன் நல்ல தூக்கத்தினை தொந்தரவு செய்தது யார் எனப் பார்க்கும்போது, ஒரு சிறிய எலி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்த சிங்கமானது எலியினை கொல்ல வேண்டும் என முடிவெடுத்தது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த எலி தன்னை மன்னிக்குமாறு சிங்கத்திடம் வேண்டியது. சிங்கம் எலியிடம் மனதுருகி அதனை விட்டுவிட்டது. பின் எலி வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடியது.

மற்றொரு நாள், சிங்கம் ஒரு வேடனின் வலையில் சிக்கி கொண்டதைப் பார்த்த எலி அங்கு வந்து வலையினை வெட்டி சிங்கத்தை காப்பாற்றியது. இதனால் சிங்கம் தப்பித்துக் கொண்டது. பின், எலி மற்றும் சிங்கம் நண்பர்களாயினர். அதன் பின்னர் அவர்கள் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

நீதி :
ஒருவர் ஆபத்து காலத்தில் உள்ள போது அவர்களுக்கு உதவ வேண்டும்.

திங்கள்
தமிழ்

அங்கத்தினர் - உறுப்பினர்
அசத்தை - பொய்
அநந்தம் - முதலில்லாதது
அந்தஸ்து - நிலை
ஐக்கியம் - ஒற்றுமை

இன்றைய செய்திகள்

10.02.20

★தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

★பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயலி மூலம் தொலைபேசி, போஸ்ட்பெய்டு மொபைல் மற்றும் இன்டர்நெட் கட்டணத்தை செலுத்தினால், ஒருசதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

★சீனாவுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குப்பின் சென்றுவிட்டு, இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

★கரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க சீனாவுக்கு அமெரிக்கா ரூ.715 கோடி நிதியுதவி வழங்குகிறது.

★ஆடவருக்கான புரோ ஹாக்கி லீக்கில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

★முத்தரப்பு மகளிா் டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா.

Today's Headlines

🌸 Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy has declared the Cauvery irrigation districts of Thanjavur, Nagapattinam and Thiruvarur as a protected agricultural zone.  He promised that a new law will be passed in the legislative assembly for the protection of the areas.

 🌸If we pay through the BSNL App for the telephone, postpaid, mobile and Internet there will be 1%discount announced by BSNL

 🌸 The Central Aviation Director has issued a circular that the foreigners who left China  after January 15   will not be allowed to enter India

 🌸 The United States provides Rs. 715 crore to China to tackle the corona virus.

 🌸The Indian team beat Belgium 2-1 in the Pro Hockey League.

 🌸 India beat the world champion Australia by 7 wickets in a match played as part of the tri-nation women's T20 match.  With this win, India have improved to the second place in the points table.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive