தமிழக கல்வி அமைச்சர் கூறியபடி
1747 ஆசிரியர்களுக்கும் விரைவில் TET புத்தாக்கப்பயிற்சி - புதிய கல்வி அதிகாரிகளிடம் வேண்டுகோள்.
RTE
Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக
பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.
தமிழகத்தில்
RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக
பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள்
அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
எடுத்துக் கூறப்பட்டது.
அதனால்
16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு
பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை
என்று கூறப்படுகிறது)
23/8/10 முதல் 16/11/12 வரையில்
TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து
அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல்
ஒருபுறம் இருக்க,
கடந்த
2018 வரை RTE பற்றி தெரிந்தும் ஆசிரியர் அல்லாத ( Non - Teaching ) பணியில்
சேர்ந்தவர்களுக்கு TET இல்லாமலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக
பதவி உயர்வு தந்து வருவது அதீத முரண்பாடு.
RTE act அடிப்படையில் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு அனைத்திற்கும் TET அவசியம். 23/8/10 க்குப் பிறகு
Non
teaching லிருந்து teaching பதவி உயர்வு பெற இடைநிலை ஆசிரியர் என்றால்
TET PAPER 1 ம், பட்டதாரி ஆசிரியர் என்றால் TET PAPER 2 ம் தேர்ச்சி பெற
வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இன்றும் பதவிஉயர்வுகள் நடைபெற்று
வருகின்றன.
ஆகவே
TET பற்றி தெரியாத (23/08/10 - 16/11/12) காலகட்டங்களில் பணியில் சேர்ந்த
ஆசிரியர்கள் மற்றும் TET பற்றி தெரிந்த காலகட்டத்தில் பதவி உயர்வு பெற்ற
சுமார் 1700 ஆசிரியர்கள் பணி நியமனங்களிலும் தமிழக அரசு ஒப்புதல்
அளித்ததன் மூலம் ஒருசில தவறுகள் நேர்ந்தது பின்னர் தெரியவந்தது.
அதனை
சரிசெய்யும் விதமாக 16/11/2012 க்கு பிறகு TET கட்டாயம் என்ற வட்டத்தில்
இந்த வகை ஆசிரியர்கள் கொண்டு வரப்பட்டனர். முன்தேதியிட்ட அந்த அறிவிப்பு
அதில் சிக்கிய ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மனசோர்வை ஏற்படுத்தியது.
பல்வேறு
சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில்
உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம்
தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது
சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு
முன்பு, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன்
பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே
நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை
பிறப்பிக்கப்படவில்லை.
விரைவில்
புதிதாக பதவியில் வந்துள்ள கல்வி துறை செயலாளர், ஆணையர் மற்றும் ஏனைய
அதிகாரிகளும், மதிப்புமிகு தமிழக அரசும் கொள்கை முடிவு மாற்றம் செய்து நல்ல
அறிவிப்பு வெளிவிடும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
காத்துக் கொண்டு உள்ளனர்.
RTE
- TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது ஆசிரியர் பணியில் உள்ள
அனைவருக்கும் வரும் விரைவில் புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து
முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை மாண்புமிகு தமிழக கல்வித் துறை
அமைச்சகம் மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு
பெறும்" என TNASA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு
தெற்கு மண்டல அமைப்பாளர் க.வரதராசன் வேண்டுகோள் விடுகின்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...