NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.8000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020




மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத் தின்கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா எனப்படும் தேசிய நாடகப் பள்ளி புதுடெல்லியில் செயல்பட்டுவருகிறது . இங்கு நாடகக் கலைஞர்கள் ஆவதற்கான மூன்று வருட டிப்ளமோ படிப்பான டிப்ளமோ இன் டிராமடிக் ஆர்ட்ஸ் வழங்கப்படுகிறது . இப்பட்டயப்படிப்பிற் கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ள இப் பட்டயப்படிப்பில் நடிப்பு , வடிவமைப்பு , இயக்கம் - மற்றும் இவை தொடர்பான கலைகள் கற்றுத் தரப்படும் . இப்பயிற்சிகள் ஆங்கிலம் மற்றும் இந்திமொழிகளில் கற்றுத்தரப்படும் .

தேவையான தகுதிகள் - இந்தியா அல்லது வெளிநாடுகளிலுள்ள ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் . 6 வேறுபட்ட நாடகத் தயாரிப்புகளில் பங்கேற்ற அனுபவம் . - ஹிந்தி / ஆங்கில மொழியில் அறிவு . . ஏதேனும் ஒரு நாடக நிபுணரிடம் இருந்து பரிந்துரைக் கடிதம்.

வயது வரம்பு :

வயது வரம்பைப் பொறுத்த வரை 18 வயது முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும் . அரசு விதிகளின்படி சில குறிப் பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் ( எஸ் . சி / எஸ் . டி . 5 ஆண்டுகள் ) தளர்வளிக்கப்படும் . தேர்வு முறை தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வு நடைபெறும் .

முதல் கட்டத் தேர்வு நுழைவுத்தேர்வும் ஆடிசன் தேர்வும் 12 ( Delhi , Jaipur , Lucknow , Bhopal , Chandigarh , Mumbai , Chennai , Bengaluru , Patna , Guwahati , Bhubaneshwar , Kolkata ) மையங்களில் நடைபெறும் . இதற்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் . இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் டெல்லி நாடகப் பள்ளியில் பயிற்சிப் பட்டறைக்கு அழைக் கப்படுவார்கள் . இதற்கான போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும் . இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர் களின் நுண்ணறிவு மற்றும் தனித்திறமைகள் தக்க வல்லுநர் குழுவால் சோதிக்கப்படும் . இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு உடற்தகுதிக்கான மருத்துவ சோதனையும் நடத்தப்படும் . அனைத்திலும் தகுதி பெற்று தேர்வு செய்யப்படும் மாணவர் களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இரண்டு முறை களில் விண்ணப்பிக்கலாம் . முதல் முறையில் உரிய சான்றுகளுடன் , கல்வி நிறுவனத்தின் https : / / nsd . gov . in / delhi என்ற இணைய தளம் வாயிலாக நெட் பேங்கிங் , கிரெடிட் , டெபிட் கார்டு மூலம் ரூ . 50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் .

நாடகப் பள்ளியின் டீனுக்கு விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கான கடிதம் எழுதி , The Dean Academics , National School of Drama , Bahawalpur House , Bhagwandas Road , New Delhi 110001 ' என்ற முகவரிக்கு ரூ . 225 - க்கு டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும் .

விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2020 .

மேலும் முழு விவரங்களுக்கு https : / / nsd . gov . in / delhi என்ற இணையதளத்தைப் பார்க்க வும் . - முத்து




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive