தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் 'நம்ம தஞ்சை' என்னும் ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்
பட்டுள்ளது
'நம்ம தஞ்சை' செயலி மூலம் தஞ்சை மாவட்டத்தை பற்றியும் மாவட்ட நிர்வாகத்தின்
செயல்பாடுகளைப் பற்றியும் அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் பிற சேவைகளை
பற்றியும் அறிந்து கொள்ளலாம்
தஞ்சை பெரியகோயில் திருக்குடமுழுக்கு சிறப்பு பதிப்பும் இதனுடன்
பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய கோயில் வரலாற்றைப் பற்றியும் பெரிய
கோயிலின் கட்டட அமைப்பு அதனுள் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க
ஓவியங்கள் கல்வெட்டுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
திருகுடமுழுக்கு நிகழ்ச்சிநிரல் பற்றியும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்
360 டிகிரி பார்வை மற்றும் மெய்நிகர் சுற்றுலா போன்ற மேம்பட்ட வசதிகள்
அருமையான ஒரு வழிகாட்டியுடன் கோயிலைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை
உங்களுக்குத் தருகிறது. ஆயிரமாண்டு அதிசயம் உங்களை அன்போடு அழைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...