NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வேண்டுகாள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளில் நடந்த குளறுபடியால் புதிய புதிய மாற்றங்களை தற்போது செய்து வருகிறது . தவறுகளின்றி தேர்வுகளை நடத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன . அவைகளை ஆராய்ந்து கண்டறிந்து முறையாக தேர்வுகளை நடத்துவதே சாலச்சிறந்தது !

ஆனால் குரூப் - 4 தேர்வில் ஏற்பட்ட குளறுபடியினால் புதிய மாற்றம் என்ற வகையில் மாணவர்களை வதைக்கும் வகையில் சில முடிவுகளை தற்போது TNPSC எடுத்து வருவதாக தெரிய வருகிறது . அதில் குரூப் - 4 தேர்வானாது முதல்நிலை , முதன்மை என இரண்டு நிலைகளில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது .

குரூப் - 4 தேர்வானது 10 - ம் வகுப்பு கல்வித் தரத்தை மட்டுமே கொண்ட தேர்வாகும் . அரசுப்பணி கிடைக்காத காரணத்தினால் ஏராளமான இளைஞர்கள் உயர்கல்வி கற்றிருந்தாலும் , இந்தத் தேர்வினை எழுதுகிறார்கள் . ஆனால் 10 - ம் வகுப்பை அடிப்படை தகுதியாக கொண்டுள்ள தேர்விற்கு 2 நிலைத் தேர்வுகள் தேவையில்லை .

இம்முறை கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் TNPSC பின்பற்றியது . அப்போது இருந்த அரசு , மாணவர்கள் நலன் கருதி 2 நிலைத் தேர்வுகளை நீக்கியது . தற்போது கொண்டு வந்துள்ள 2 நிலை தேர்வானாது மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் நடவடிக்கையாகும் . ஒரு தேர்விலேயே கிராமப்புற மாணவர்கள் வெற்றி அடைய முடியாமல் இன்னும் தினறி வருகின்றனர் . 2 தேர்வுகள் என்பது சாமானிய மாணவனுக்கு
குரூப் - 4 பணியை எட்டாக்கனி
ஆக்குவது உறுதி !

அதேபோல் TNPSC விடைகளில் A , B , C , D , E என்ற 5 விடைகளை வழங்கும் முறைகளை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த முறையினால் எந்தப் பயனும் இருக்க வாய்ப்பில்லை | ஏற்கனவே இருந்த A , B , C , D முறைகளில் விடைத்தாளில் விடைகளை குறிக்காத தேர்வர்களின் விடைத்தாள்களை திருத்தாமல் தள்ளுபடி செய்தாலே போதுமானது.

தேர்வாணையத்தின் சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் மீதே திணிக்கப்படுகிறது . ஆனால் தேர்வாணையத்தில் எந்தவொரு சீர்திருத்தமும் செய்யப்படவில்லை . எந்தப் பாவமும் செய்யாத ஏழை - எளிய மாணவர்களின் தலைகளின் மீது சுமை சுமத்தப்படுகிறது . கிராமப்புற மாணவர்கள் அரசு வேலையை வெறும் கெளரவமாக பார்க்கவில்லை .

மாற்றப்பட வேண்டியது தேர்வாணையமும் , அதன் நடைமுறைகளும் தான் . புதிய முறை , புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் உண்மையிலேயே போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களை வதைக்காதீர் ! குளறுபடிகளின்றி தேர்வினை நிச்சயம் நடத்த முடியும் ! ! எனவே குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளை பழைய முறைப்படியே நடத்த பரிசீலனை செய்ய வேண்டுமென ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பாக வேண்டுகிறோம் . நன்றி !




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive