*.இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிந்த நிலையில் தற்காலி கமாக தேர்வு செய்யப்பட்ட வர்களின் விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
*.காவல், சிறை மற்றும் தீய ணைப்புத் துறைகளிலுள்ள 8,826இரண்டாம் நிலைக் காவலர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப் போர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுத் தேர்வுக் கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது.
*.இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்திலுள்ள 32 மாவட்ட மையங்களில் நடத் தப்பட்டு, அதைத் தொடர்ந்து 15மையங்களில் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்பட்டன.
*.இறுதியாக 2,410 விண்ணப் பதாரர்கள் இரண்டாம் நிலைக் காவலர்கள் மாவட்ட மாநகர ஆயுதப்படைக்கும், 5,962 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைக் காவலர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும். 210 விண்ணப்பதாரர்கள் சிறைத் துறைக்கும், 191 விண்ணப் பதாரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
*.மொத்தமாக 8,773 விண்ணப் பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 2,432 பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்கள் அடங்குவர். முழுமையான இனசுழற்சி விவரங்களுடன் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களின்சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
*.மொத்தம் 8,773 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 2,432 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...