ஜுன் 21 சூரிய கிரகணத்தின் சிறப்பம்சங்கள்..!
இந்தாண்டின் வருடாந்திர சூரிய கிரகணத்திற்கான தேதி நெருங்கிக்
கொண்டுள்ளது. ஆனால், இது வழக்கமான ஒன்றல்ல. ஏனெனில், நீண்ட பகல் பொழுது
நிகழும் நாளில் இது நிகழ்வதால், இது சிறப்புவாய்ந்த ஒன்று என்று
கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் போன்று, இதை நீங்கள் வெறும் கண்களால் பார்க்க
முடியாது. அதற்கென்று தனியான பாதுகாப்பு கண்ணாடிகள், பைனாகுலர்
உள்ளிட்டவைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம் அல்லது டெலஸ்கோப் மூலமாக
பார்வையிடலாம்.
பூமிக்கும் சூரியனுக்கு இடையில் நிலவு வரும்போது, சூரியனின்
வெளிச்சம் பூமியின் மீது படுவது தடுக்கப்படுகிறது. இதுதான் சூரிய கிரகணம்
என்று அழைக்கப்படுகிறது. அப்போது நிலவின் நிழல் பூமியில் விழுகிறது..
முதல் நிழல் அம்ப்ரா என்றும், இரண்டாவது நிழல் பெனும்ப்ரா என்றும் அழைக்கப்படுகிறது.
ஜுன் 21ம் தேதி நிகழவுள்ளதாக கூறப்படும் சூரிய கிரகணம், இந்தியாவில்
காலை 9.15 மணிக்குத் தொடங்கி, மாலை 3.04 மணிக்கு நிறைவடையும் என்று
கூறப்பட்டுள்ளது. ஜுன் 21ம் தேதி இந்த சூரிய கிரகணத்தை நீங்கள் காணத் தவறினால், இந்தாண்டு டிம்பர் 14-15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 3 வகைகள் உள்ளன. ஒட்டுமொத்தமான, வருடாந்திர மற்றும் பகுதியளவான போன்றவையே அந்த வகைப்பாடுகள்.
சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் இரண்டுமே, ஓரிடத்தில் துவங்கி
இன்னொரு இடத்தில் முடிவடைகின்றன. ஒரு ஆண்டில், 2 முதல் 5 சூரிய கிரகணங்கள்
வரை ஏற்படலாம்.
ஒட்டுமொத்த கிரகணங்கள் என்பது 18 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன.
ஒட்டுமொத்த சூரிய கிரகணத்தின் அதிகபட்ச காலஅளவு 7.5 நிமிடங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...