Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இம்மாத இறுதியில் பிளஸ் 2, 'ரிசல்ட்' வெளியீடு?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. அன்றைய தினம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும், 36 ஆயிரம் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை; அவர்களுக்கு மட்டும், பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஜூன், 10ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது. இதையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த பணிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இன்று துவங்குகின்றன. இன்னும் ஒரு வாரத்தில், இப்பணிகள் முடிந்து, இம்மாத இறுதியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.ஒரு பாடத்திற்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மட்டும் முடிவை நிறுத்தி வைத்து, மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive