இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது பெற்றோர்களிடமிருந்து கட்டணம் வாங்குவதற்காக தான் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
குழந்தைகளின் கல்வி வீணாக கூடாதே என்ற எண்ணத்தில் ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஆன்லைனில் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து ஆன்லைன் நடத்தியது இந்த கல்வி கட்டணத்தை பெறுவதற்கு தானா? என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது .அரசின் எச்சரிக்கையை மீறி அடாவடியாக சில தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் வருவதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் இந்த ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும் ஒரு சாரார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்
ஆனால் இதுகுறித்து பள்ளிகள் தரப்பில் இருந்து கூறும்போது பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்றாலும் ஆசிரியர்கள் சம்பளம், மின்கட்டணம், ஓட்டுநர் சம்பளம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து ஆன்லைனில் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...