NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தூங்கும் விஷயத்தில் விலங்குகள் எப்படி? நம்மைப் போல குறட்டை விடும் விலங்குகள் உள்ளனவா?

தூங்கும் விஷயத்தில் விலங்குகள் எப்படி? நம்மைப் போல குறட்டை விடும் விலங்குகள் உள்ளனவா? 

தூங்குவதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காகத்தான் அடுப்பங்கரைப் பகுதியில் அடிக்கடி உலா வருகின்றன.நாம் படுக்கும் இடத்தின் அருகில் சாக்கு ஒன்றைப் போட்டுப் பாருங்கள். அதில் வந்து இவை படுத்துக் கொள்ளும். நமது உடலிலிருந்து வரும் உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்வதற்குத்தான் இப்படிச் செய்கின்றன. குட்டிகள் ஹாயாகத் தூங்கும்போது அவற்றை அரவணைத்தபடி தாய்ப் பூனை அருகேயே படுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

குட்டிகள் கவலையில்லாமல் தூங்கும். அலர்ட்டாக இருப்பவை தாய்ப் பூனைகளே. ஆடு, மாடுகள் நான்கு கால்களையும் மடித்து, அதன் மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டு படுக்கும். பாம்புகள் எல்லாம் ஸ்பிரிங் போல உடலைச் சுற்றிக்கொண்டு உறங்கும். ஐரோப்பாவில், சில வகைக் கிளிகள், வவ்வால் போலத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகின்றன.வாத்து மற்றும் பல பறவைகள் நின்றபடியே தூங்கும். ஆஸ்திரேலிய போலார் கரடிகள் மரத்தைக் கட்டிப்பிடித்தபடி தூங்கும். எறும்புகள் பாதுகாப்பான இடத்தில் மணற்பரப்பை திண்டு போல ஆக்கிக் கொண்டு, அதில் தலையைப் பதித்தபடி தூங்கும். இவற்றில் கீரி போல இருக்கும் ராக்கூன் என்ற விலங்கு தூங்கும்போது கர்புர் என்று பலமாகக் குறட்டை விட்டபடி தூங்கும். 

இப்படிப் பல வகைகளில் உறங்கும் விலங்குகளை ஆராய்ந்தவர்கள், அவைகளுக்குக் கனவுகள் வருவதற்குக்கூட சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive