கல்லுாரியில் அறிவியல், கலை பிரிவுகளுக்கு தனித்தனியே பாடம் நடத்தலாம்: சிவகாமி.
சென்னை;
'கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கல்லுாரிகளில், அறிவியல் மற்றும்
கலைப்பிரிவு மாணவர்களை, இரு பிரிவுகளாக பிரித்து, வாரத்திற்கு, மூன்று நாட்கள்
என, தனித்தனியே பாடம் நடத்த வேண்டும்' என, சமூக சமத்துவ படை கட்சியின் தலைவர்
ப.சிவகாமி, முதல்வர் இ.பி.எஸ்.,க்கு கோரிக்கை விடுத்துள்ளார். பரவும் அபாயம்ஓய்வு
பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவர் விடுத்துள்ள அறிக்கை: வைரஸ் தொற்று, மிக வேகமாக
பரவி வருகிறது.தற்போது, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், சுழற்சி முறையில் இரண்டு கட்டமாக,
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் முறை உள்ளது. சமீபத்தில், அதை ரத்து செய்து
விட்டு, ஒரே நேரமாக, அதாவது, காலை, 9:30 முதல், 4:30 மணி வரை, வாரத்தில் ஆறு
நாட்கள் கல்லுாரிகள் செயல்பட வேண்டும் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால், சமூக தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, கீழ்கண்ட சாத்திய
கூறுகளை, அரசு ஆய்வு செய்யலாம். 'கிரேடு' ஒன்று கல்லுாரிகளில், காலை, மாலை என,
இரு சுழற்சிகளையும் உள்ளடக்கி, 3,000க்கும் அதிகமான மாணவர்கள்
பயில்கின்றனர்.அவர்களை, அறிவியல் மற்றும் கலை பிரிவினர் என, இரண்டாக பிரித்து,
வாரத்திற்கு மூன்று நாட்கள் என, இரு பிரிவினருக்கும் ஒதுக்கலாம்.உதாரணத்திற்கு, அறிவியல் பிரிவு மாணவர்கள், 50 பேர் எனில், அவர்களை இரண்டாகப்
பிரித்து, காலை, மாலை என, தலா, 25 பேர் என, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்
பாடம் நடத்தினால், வைரஸ் தொற்று வேகமாக பரவுவது தடுக்கப்படும். சமூக
தொற்றுஅதேபோல், கலை பிரிவு மாணவர்களுக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் எனும்போது,
ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் சமூக தொற்று ஏற்படாது.
மாணவர்கள் வாயிலாக, வகுப்புகளை சுத்தம் செய்யக்கூடாது.கல்லுாரிகளில், 'அம்மா'
உணவகம் துவங்க வேண்டும். மாணவர்களுக்கான கல்வி கடன்களை வழங்க, வங்கி ஊழியர்கள்
கல்லுாரிகளுக்கே நேரடியாக சென்று விசாரித்து, அங்கேயே வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.இவ்வாறு, சிவகாமி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...