ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க
புது வசதி
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும்
‘ஜீவன் பிரமான்’ என்ற வாழ்வு சான்றிதழை வருங் கால வைப்புநிதி அலுவலகங்கள் மற்றும்
ஓய்வூதியம் வழங்கும் வங் கிகளில் சமர்ப்பிப்பது வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கால்
‘ஜீவன் பிரமான்’ சான்றிதழை தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலம்
சமர்ப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, இம் மையங்களுடன்,
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும்,
ஓய்வூதியதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வருடத்தின் எந்த நாளிலும் ‘ஜீவன் பிரமான்’
சான்றிதழை சமர்ப்பிக்கும் வகை யில் புதிய மாற்றம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் சமர்ப்பித்த நாளில் இருந்து ஒரு வருடம் வரை வாழ்வு சான்றிதழ்
செல்லுபடியாகும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...