பொள்ளாச்சி
ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதா. இவர்,
பள்ளியில் மாணவர்களிடம் மரங்கள்வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் சக
ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.மாணவர்கள் உதவியுடன்,
பள்ளிகளில் மரக்கன்றுகளும் நட்டு பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா
விடுமுறையை பயன் உள்ளதாக மாற்ற யோசித்த ஆசிரியை, நாற்று வளர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளார். ஆசிரியை கூறியதாவது:எனது வீட்டில், 600 நாற்றுகளை வளர்ந்துள்ளேன்.
பூவரசு, ஆத்தி, சிறு கொன்றை உள்ளிட்ட விதைகளை போட்டு, 600 நாற்றுகள் உருவாக்கினேன்.
இவைகள் மருத்துவ குணம் கொண்டவையாகும்.தற்போது, நாற்றுகளாக வளர்க்கப்பட்டு
வருகின்றன. தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு,
தெரிவித்தார்.
வினாடி வினா போட்டி
ஐக்கிய நாடுகள் சபை, 'பல்லுயிர் கொண்டாடு' என்ற
தலைப்பில், கொண்டாட உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்லுயிர் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உலக சுற்றுச்சூழல்
தினத்தை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை கொண்டாடுவதோடு, கல்லுாரி மணவர்களுக்கு,
'ஆன்லைன்' வினாடி - வினா போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், 'ஆன்லைன்'
வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. இத்தகவலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை
ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...