கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 40 சதவீத ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை மாலை முதல் மீண்டும் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்தது.
சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாளன்றே கொரோனாவால் ஜெ.அன்பழகன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...