🛑2019 - 20 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி சார்பாக கீழ்க்கண்ட விவரங்களை முழுமைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
🛑பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு மற்றும் அரையாண்டுதேர்வு தேர்வுகளின் விடைத்தாள்கள்,பாட ஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் வகுப்பு ஆசிரியர்களின் தொகுப்பு மதிப்பெண்பட்டியல்கள் மற்றும் பள்ளி தொகுப்பு மதிப்பெண்பட்டியல் முழுவதும் முழுமைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...
🛑பத்தாம் வகுப்பு மாணவர்களில் வருகை பதிவேட்டினை ஒவ்வொரு பருவம் வாரியாக முழுமைப்படுத்தி குறிப்பாக(முதல் பருவம் ,இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவம்) மூன்று பருவங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு வருகையினை முழுமைப்படுத்தி அதனை தலைமையாசிரியர்கள் சரி பார்த்து சான்றொப்பம் இட வேண்டும் என்பதை அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...