தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும் முட்டை ஹேர்பேக்
முட்டைகளில் நிறைய ஆரோக்கிய
நன்மைகள் உள்ளது. ஊட்டச்சத்துடன் சக்தி நிறைந்திருக்கும் முட்டைகள் உங்கள்
தலைமுடிக்கு நல்ல பலனை தரும். நீங்கள் எதிர்கொள்ளும் தலைமுடி பிரச்சினைகளை தீர்க்க
முடியும்.தலைமுடி உடையக்கூடிய தன்மை, வறட்சி, பொடுகு அலர்சி என எல்லாவற்றையும்
முட்டையை வைத்து சரி செய்யலாம்.
முட்டை ஹேர் மாஸ்க்
முட்டையில் உள்ள அத்தியாவசிய
கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. முட்டையின் மஞ்சள்
கருவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் முடிக்கு நல்ல பலனை தரும்.
இது எளிதில்
உடைக்கக்கூடிய முடியை சரிசெய்ய உதவும். இந்த முக்கிய கூறுகளை ஊடுருவி உறிஞ்சுவதற்கு
கொலஸ்ட்ரால் உதவுகிறது, இதனால் செயல்திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான கூந்தலுக்கு
அவசியமான புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, டி, ஈ, கே ஆகிய சத்துக்களை முட்டை
தருகிறது.
உடையக்கூடிய முடி சரி செய்ய:
முட்டையின் வெள்ளை எடுத்து ஒரு டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெயில் கலக்கவும். பேஸ்ட் போன்ற நிலைத்தன்மை வரும் வரை அடித்து, முழு
உச்சந்தலையில் தேய்க்கவும் .
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, பின்னர்
குளிர்ந்த நீர் மற்றும் லேசான ஷாம்பூவுடன் கழுவவும்.
மென்மையான கூந்தலுக்கு:
ஒரு
கப் தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்க்கவும்.
இதை நன்றாக கலந்து உங்கள் தலைமுடிக்கு தடவவும்.குறைந்தது 20 நிமிடங்களாவது வைத்து,
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முட்டையின் வாசனை வருவதும்
குறையும்.
சேதமடைந்த முடியை சரிசெய்ய:
ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் மஞ்சள்
கருவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும்
அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக
கலந்து தலைமுடியில் தடவவும். இது இரண்டு மணி நேரம் காயவைத்து பின்னர் அதை கழுவவும்.
இந்த ஹேர் பேக்குகளை குளிர்ந்த அல்லது சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...