IT இளைஞர்களுக்கு Infosys சொன்ன நல்ல செய்தி!
கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவித்ததில்
இருந்தே, வேலை இழப்புகள், சம்பள குறைப்பு போன்ற பிரச்சனைகளைத் தான் தொடர்ந்து
பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஐடி கம்பெனியில் "120 நிமிடம்
அவகாசம்! அதற்குள் ராஜினாமா செய்யணுமாம்! IT கம்பெனிகளில் தலை தூக்கும் லே ஆஃப்
பூதம்!" போன்ற பல பகீர் சம்பவங்களைத் தான் படித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த
மாதிரியான நேரத்தில், எல்லோருக்கும் நல்ல செய்தி சொல்வது போல, Infosys ஒரு
விஷயத்தைச் அறிவித்து இருக்கிறது.
வேலை கொடுப்போம்
ஏற்கனவே இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற மிகப் பெரிய ஐடி
நிறுவனங்கள், வேலைக்குத் தேர்வு செய்தவர்களை கட்டாயம் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி
இளைஞர்களின் வயிற்றில் பால் வார்த்தது நினைவில் இருக்கலாம். சரி இப்போது இன்ஃபோசிஸ்
கம்பெனி சொன்ன நல்ல விஷயத்துக்கு வருவோம்.
நல்ல செய்தி
இந்த கொரோனா காலத்திலும், வழக்கம் போல கல்லூரிகளுக்குச் சென்று கேம்பஸ் இண்டர்வியூ
எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனம். இந்த செய்தி
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை
கொடுக்கும் என்றே சொல்லலாம். சரி எத்தனை பேரை வேலைக்கு எடுக்கப் போகிறார்கள்.
ஆட்கள் எண்ணிக்கை
இந்த நிதி ஆண்டில், இன்ஃபோசிஸ் கம்பெனி கேம்பஸ் இண்டர்வியூ வழியாக எத்தனை மாணவர்களை
வேலைக்கு எடுக்க இருக்கிறார்கள் என்கிற விவரங்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு அளவுக்கு இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த
ஆண்டு, இன்ஃபோசிஸ் சுமார் 18,000 பேருக்கு வேலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் தரப்பு
கேம்பஸ் இண்டர்வியூ நடத்த, இன்ஃபோசிஸ் தரப்பில் இருந்து கல்லூரிகளிடம் விரைவில் பேச
இருக்கிறார்களாம். கல்லூரி எப்போது தயாராகிறதோ அதன் பின் புதிய பாதுகாப்பான
வழிமுறைகள் படி ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ்
நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் க்ரிஷ் சங்கர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...