++ ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
2015-16ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (அறிவியல், சமூக அறிவியல்) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கும் பொருட்டு அவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்.
IMG_20201102_230601


2015-2016ம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் பட்டியல் பார்வை 1 ல் படிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதம் வாயிலாக பெறப்பட்டது. மேற்படி பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுள் 30 நபர்கள் அறிவியல் படத்திற்கும் 50 நபர்கள் சமூக அறிவியல் பாடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பார்வையில் கண்ட இவ்வலுவலக செயல்முறைகளில் கலந்தாய்வு மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்டவாறு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யக் கோரி சில முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து தனித் தனியாகக் கருத்துருக்கள் வந்த வண்ணம் உள்ளன. 2015-16ம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை ( Common order ) வழங்க ஏதுவாக அவ்வாண்டில் பணியில் சேர்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் இதர விவரங்களுடன் படவாரியாக தொகுத்து எவரது பெயரும் விடுபடாமல் கருத்துருக்களை விரைவில் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Proceedings Download here...

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...