++ அவசர கால கடனுதவித் திட்டம்:மேலும் 27 துறைகளுக்கு நீட்டிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) மத்திய அரசு அறிவித்த அவசரகால கடனுதவித் திட்டம் சுகாதாரத் துறை உள்பட மேலும் 26 துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கே.வி. காமத் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மீள்வதற்காக, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. சுயசாா்பு இந்தியா என்ற இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசரகால கடனுதவி திட்டமும் அறிவிக்கப்பட்ட இதன் அடுத்தகட்டமாக கடந்த 12-ஆம் தேதி ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின் மூன்றாவது பகுதியாக கீழ் ரூ.2.65 லட்சம் கோடி மதிப்பிலான புதிய சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இப்போது அந்தத் தொகையின் மூலம் அவசரகால கடனுதவித் திட்டத்தின் இரண்டாவது பகுதி செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதன்படி கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நிலவரப்படி ரூ.50 கோடிக்கு அதிகமாக, ரூ.500 கோடிக்கு குறைவாக கடன் நிலுவை உள்ள நிறுவனங்களுக்கு 5 ஆண்டு தவணையில் கடன் வழங்கப்படுகிறது. இதில் 12 மாதங்கள் தவணை நிறுத்தி வைப்பு சலுகையும் உண்டு.

சுகாதாரம், எரிசக்தி, கட்டுமானம், மனை வணிகம், ஜவுளி, மருந்து தயாரிப்பு, சிமெண்ட், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சுற்றுலா, சரக்குப் போக்குவரத்துத் துறை சாா்ந்த நிறுவனங்களுக்கு இந்த கடன் அளிக்கப்படுகிறது.

 இந்திய ரிசா்வ் வங்கி நியமித்த கே.வி.காமத் குழு அளித்த அறிக்கையின்படி இந்தத் துறைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...