NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி வாரத்தில் 4 நாட்கள் வேலை- மத்திய அரசின் புதிய திட்டம் ?

இனி வாரத்தில் 4 நாட்கள் வேலை.. மத்திய அரசின் புதிய திட்டம்

சனிக்கிழமை என்றாலே நம்மையும் அறியாமலேயே பலருக்கும் சந்தோஷம் பொங்கிக் கொண்டு வரும். ஏனெனில் அடுத்த நாள் விடுமுறை. மூக்குபிடிக்க சாப்பிட்டு, பகலில் தூங்கிவிட்டு, மாலை நேரத்தில் குடும்பத்தோடு செல்வது தான் பலரின் வழக்கமாக இருக்கும். அதிலும் சில மாதங்களில் அலுவலக கூட்டம், இலக்கினை எட்ட முடியவில்லை எனில், அந்த ஞாயிற்றுகிழமைகளில் கூட சில நேரம் அலுவலகம் செல்வோம். அந்த நேரங்களில் அடுத்த ஞாயிற்றுகிழமை எப்போது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருப்போரும் உண்டு. ஆனால் இப்படி இருப்போருக்கு ஒரு ஹேப்பி நியூஸ் காத்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

4 நாட்கள் வேலை செய்தால் போதும் மத்திய அமைச்சகம் வேலை நாட்கள் தொடர்பாக வரும் நாட்களில், புதிய நெறிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் புதிய திட்டம் இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரமும் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை

செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா திங்களன்று, ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் உடன்பாடு அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஊழியர் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதற்கு நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரசின் அனுமதி தேவையில்லை எனினும் நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்து ஏற்ப இருக்கும் என்றும் சந்திரா கூறியுள்ளார். அதோடு இந்த விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தபட்டவுடன் முதலாளிகள், தங்கள் ஊழியர்களின் ஏற்பாட்டை ஒப்புக் கொண்டால், வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாள் வேலை திட்டத்திற்கு மாற அரசின் அனுமதி தேவையில்லை

இதனை உறுதி செய்ய வேண்டும்

வாரத்தில் நான்கு நாட்களை ஊழியர்கள் தேர்வு செய்தால், அடுத்த வார இடைவெளி மூன்று நாட்கள் இருக்க வேண்டும். இதே ஐந்து நாள் என்றால், இரண்டு நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சந்திரா கூறியுள்ளார்.

சுதந்திரம் இருக்கும்

இந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன் நிறுவனத்திற்கு 8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் என்பதை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியால், பல ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் கூடுதலாக கிடைக்கும். வேலை அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் வாய்ப்புள்ளதாக, வேலை நாட்களில் வேலை நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன பயன்

நிறுவனங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் குறைந்த அலுவலக வாடகை மற்றும் அதிக ஆற்றல், உற்பத்தி என பல வகையிலும் ஊழியர்களிடமிருந்து பயனடையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இது அமலுக்கு வந்தால் தான் தெரியும், இது எந்தளவுக்கு நிறுவனங்களும் ஊழியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று.

நல்ல விஷயம் தான் டீம் லீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரிதுபர்ணா சக்கரபர்த்தி, அரசின் இந்த புதிய திட்டம், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நன்மையே கொடுக்கும். இது கட்டாயம் இல்லை. இது ஒரு ஆப்சன் தான். ஆனால் பல உற்பத்தி நிறுவனங்களும் இதனை ஏற்றும் கொள்ளலாம். இதனை நிறுவனங்கள் நினைத்து பாருங்கள். ஒரு நாள் செலவினம் குறையும். இதுவே நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம் தான் என்று கூறியுள்ளார்

வேலை வாய்ப்புகள் குறையலாம் எனினும் மற்றொரு தரப்பினர் 12 மணி நேர சிஃப்டுக்கு மாறினால், ஊழியர்களுக்கான வாய்ப்புகளும் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் மூன்று சிஃப்டுகளில் இருந்து 2 சிஃப்ட்டாக மாறும் போது குறையலாம் என்றும் கூறுகின்றனர். ஆக இது எந்தளவுக்கு சாத்தியமான ஒன்று என்று அமலுக்கு வரும்போது தான் தெரியவரும். எப்படி இருந்தாலும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்றால் செம ஜாய் தான்.




1 Comments:

  1. இது காஸ் மானியம் போல தான்.12 மணி நேரம் வேலை செய்ய பழக்கி விட்ட பிறகு வாரம் 6 நாட்கள் வேலை செய்யச் சொல்வார்கள்.இதை ஆதரிக்ககூடாது. இதில் ஒரு ஜாலியும் இருக்கப்போவதில்லை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive